என்ன ஒரு ஆட்டம் வானளாவிய கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் நட்சத்திரம் போல் ஜொலிக்க, அலை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டம் சோகத்துடன் இருக்கையில் அமர்ந்திருக்க, காற்று கூட அந்த இடத்திற்கு நுழையாமல் சற்று நேரம் காத்திருக்கலாம் என்று யோசித்திருந்த வேளையில், யாரோ ஒருவன் பற்றவைத்த நெருப்பில் சட்டென்று பிடித்த காட்டுத்தீ போல, ஒவ்வொரு மனிதனின் வாயில் அவன் பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. போற்றுவார் போற்றட்டும் ! புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் ! என்பதற்கு இணங்க பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மைதானத்திற்கு விளையாட வந்தார் எம். எஸ். தோனி. ஆம், அவர் வந்திருந்த நேரம் அணியானது தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல அவர்களால் கடைசியாக அனுப்பப்பட்ட ஆயுதம். கைபேசியில் notification வருவது போல, அந்த score board ஒவ்வொரு முறையும் எச்சரித்துக் கொண்டிருந்தது. 6 பந்துகளில் 23 ஓட்டங்கள். கடினமான இலக்கு. "எழில் , டிவி யை off பண்ணிட்டு படுக்க வா ! காலையில highlights பாத்துக்கோ" என...