நோயாளியும் மருத்துவரும்
லியோ என்ற வாலிபன் உடல் நலம் சரியில்லை என்று மருத்துவரை பார்க்கச் சென்றான். அங்கு மருத்துவர் நோயாளிகளை தத்தம் வியாதிகளுக்கு ஏற்ப சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார். மருத்துவர் அவனை அணுகி " தங்களுக்கு என்ன பிரச்சனை" என்று வினவினார். அவன் அவருக்கு மறுமொழியாக " நான் என்ன வியாதி என்று கூற முடியாது. நீங்கள் ஒரு மருத்துவர் தானே? நீங்களே கண்டுபிடித்து சிகிச்சை அளியுங்கள்" என்றான். அதற்கு மருத்துவர் மிகவும் பொறுமையாக " நான் மருத்துவர் தான் ஆனால் நீங்கள் உடல் ரீதியான பிரச்சனை என்ன என்று கூற விட்டால் என்னால் எப்படி குணப்படுத்த முடியும்" என்று கூறினார். மேலும் அவர் நோயின் தன்மை தெரியாமல் வைத்தியம் பார்ப்பது கூடாத காரியம். அது உங்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் கூட பாவம் என்ற கொடிய நோய் நீங்க வேண்டுமெனில், நம்முடைய இருதயத்தின் அறைகளை திறந்து பரம வைத்தியரான ஏசுவிடம் சென்று அறிக்கையிடும் போது மட்டுமே "ரட்சிப்பு" என்ற மருந்தை தந்து நமக்கு சுகமளிப்பார்.
பள்ளிப் பருவத்தில் நமக்கு நன்கு அறிமுகமான ஒரு இயற்பியல் அறிஞர் விதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நித்திய வாழ்விற்கான ஒரே விதி
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒரு பொருளின் மீது நாம் விசையை செலுத்தும் போது அதே அளவு அதற்கு சமமான எதிர் விசை ஒன்று எதிர் திசையில் செயல்படும். அதே போல தான், நம் வாழ்வில் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி ஒரு அடி அவரை நோக்கி எடுத்து வைக்கும் போது, எதிர் திசையில் இருந்து செயலாற்றுகின்ற ஆட்டுக்குட்டியானவர் தம் மந்தையில் சேர்த்துக் கொள்ள பல அடியை எடுத்து வைக்கிறார்.
வேதாகமத்தில் இறை மகன் இயேசு மனந்திரும்பி வந்த மக்களை , பிணியாளிகளை மற்றும் அடிமைத்தனத்தில் இருந்தோரை பல்வேறு விதமாக சுகமளிக்கிறார். பிசாசு பிடித்தவனை அதட்டுகிறார் , வார்த்தையின் மூலமாக , கரங்களைத் தொட்டு , உமிழ்ந்து போன்ற செயல்களின் வாயிலாக அதிசயம் நிகழ்த்துகிறார். ஆனால் ஒரு பெண்ணின் நம்பிக்கை எவ்வளவு பெரிது என்பதை இங்கே காணலாம்.
மாற்கு 5 ஆம் அதிகாரத்தில் இரண்டு பெண்களை குணப்படுத்துகிறார். யாவருக்கும் நன்கு அறிந்த பகுதி, ஜெப ஆலய தலைவரின் 12 வயது நிரம்பிய மகள் , 12 வருடமாக வியாதி நிரம்பிய பெண்.
முதல் பகுதியில் யவீரு , "நீர் வந்து உமது கைகளை அவள் மேல் வையும். உடனே ஆரோக்கியம் அடைவாள்" என்றான். திரளான மக்கள் கூட்டம் ஏசுவை நெருக்க, அவன் வீட்டை நோக்கி செல்கிறார். அந்த கூட்டத்தில் இருந்த பலருக்கு குறைவுகள் இருந்திருக்கலாம். அவர் ஜெப ஆலய தலைவனின் வீட்டிற்கு செல்வதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணிருக்கலாம். இன்னும் சிலர் மகளை சுகப்படுத்திய பிறகு நம்முடைய கஷ்டங்களை கூறலாம் என்று சிந்தித்திருக்கலாம். அனால் தனக்கு உண்டான எல்லாவற்றையும் செலவழித்து சுகம் பெறாத பெரும்பாடுள்ள பெண் , போகும் பாதையில் போதகரை இடைமறிக்க வேண்டாம் என்று மனதில் அவள் எண்ணி இருந்தாலும் தன்னுடைய தேவை மிக அவசியம் என்பதை உணர்ந்து காலம் தாழ்த்தாமல் அவர் உடையை தொட்டு பார்த்தாவது நான் சுகம் அடைவேன் என்று தீர்மானம் பண்ணி கூட்டத்திற்கு பின்னாக வந்து நம்பிக்கையோடு தொடுகிறாள். சுகமும் பெறுகிறாள்.
"பின்னால் வந்து தொட்டவளை , இயேசு கூட்டத்தின் முன்னால் நிறுத்தி விசுவாசமே உன்னை ரட்சித்தது" என்று கூறுகிறார். அதன் பின் யவீரு மகள் மறித்து விடுகிறாள் பின்னர் உயிரோடு திரும்ப வருகிறாள். ஒருவேளை ஜெப ஆலய தலைவன் யவீரு , "ஆண்டவரே நீர் ஒரு வார்த்தை சொல்லும் என் மகள் பிழைப்பாள்" என்று சொன்னால் கூட மகளை அவ்விடத்திலிருந்தே சுகம் அளித்திருப்பார்.
மிக அருமையான பாடல் வரிகள் ஒன்று என் நினைவிற்கு வருகிறது.
"கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,
ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. — வா பாவீ, மலைத்து நில்லாதே, வா" ....
என்னே ஒரு பாடல்!. நம்மிடத்தில் நன்மை ஒன்றும் இல்லை என்று நன்கு அறிந்திருக்கின்ற தேவன், பாவத்தை மட்டும் வந்து என்னிடம் முறையீடு என்று அன்புடன் அழைக்கிறார்.
நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
இறை வாழ்வில் அடித்தளமாக அல்லது ஆதாரமாக ஒரு நாணயத்தின் இரண்டு பக்கமாகக் கருதப்படுவது மனந்திரும்புதல் மற்றும் விசுவாசம்.
நமது இதய வீட்டின் கதவுகளைத் திறந்து பாவம் என்ற குப்பைகளை அகற்றி, அகத்தை அவரது முகத்தை நோக்கி திருப்புவது மனந்திரும்புதல்.
அவ்வாறு செய்தால் பரலோகத்தில் இருக்கிற இறை மைந்தன் ஒருவரால் மட்டுமே நமக்கு இரட்சிப்பு கிடைக்கும் என்று நம்புவது விசுவாசம்.
அவள் உறுதியாக விசுவாசித்தாள் ஏசுவின் உடையை தொட்டாவது சுகம் பெறுவேன் என்று நம்பினாள். 12 வருடமாக அவள் செய்த பாவத்தின் நிமித்தமாக கூட அந்த பாடு அநுபவித்திருக்கலாம். ஏசுவை கேள்விபட்டவுடனேயே அவள் கூட்டத்தில் பல தடைகள் இருந்தாலும் அத்தனையும் விலக்கிக் கொண்டு அவர் பாதம் சென்றாள். நாமும் கூட நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து அந்த பெண்ணைப் போல காலம் தாழ்த்தாமல் அவர் பாதத்தில் விழுந்தால் , நம்மை தூக்கி நிறுத்துகிற தேவனாய் இருப்பார்.
இந்த கொரோனா காலக் கட்டத்தில் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க பல லட்சங்கள், கோடிகள் என மனிதம் செலவழித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம் இஸ்ரவேலரை கொள்ளை நோயிலிருந்தும் வாதைகளிலிருந்தும் காத்த தேவன் உறங்குவதுமில்லை கைவிடுவதுமில்லை. அவர் நம்மைக் காப்பார்
இறைவனடி சேருவோம்!
நித்திய வாழ்விற்கு தயாராகுவோம்!
ஆமென்

ஆமென்...
ReplyDelete'பரம வைத்தியர்' என்ற தலைப்பில் பிரமாதமான படைப்பு. உங்களது துவக்கம் சிறியதாக இருந்தாலும், முடிவு நிறைவாக இருக்க வேண்டுதல்களும், வாழ்த்துக்களும். இஸ்ரவேலரின் பாலைவனப் பயணம், மற்றவர் பார்வையில் அற்பமாகத்தான் இருந்திருக்கும்! முடிவு? பாலும் தேனும் ஓடுகிற கானான் அல்லவா? வழிநடத்தியது கர்த்தர்.. எனவே முடிவு எப்போதும் சம்பூர்ணமே! உங்களது ஒவ்வொரு நொடியிலும், நடையிலும் கர்த்தர்தாமே உங்களை வழிநடத்துவாராக.
ReplyDeleteஇந்த "துடுப்பு", உங்களை மட்டுமல்ல இன்னும் பலரை கரைசேர்க்க உதவும் என நம்புகிறேன். தம்மை நம்புவோர் எல்லாரையும், எல்லாவற்றையும் செய்ய பெலப்படுத்தும் இறைமகன் இயேசு கிறிஸ்து தாமே உங்களை தொடர்ந்து பெலப்படுத்துவாராக.
வாழ்த்துக்களும்! வந்தனங்களும்!!
ஐயா வணக்கம் உங்கள் வாழ்த்துரை உங்களுடைய விமர்சனங்களும் மிகவும் அருமையாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது இந்த துடுப்பு பலரையும் கரைசேர்க்கும் நாமும் கரை சேருவோம்
Deleteநன்றி 🙏
DeleteAmen
ReplyDeleteநன்றி
DeleteGod bless you Alex...keep it up....
ReplyDeleteநன்றி 🙏
Deleteசிறப்பாக கர்த்தருடைய பணியே செய்டா உனக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி 🙏
Deleteமிகச் சிறப்பு அலெக்ஸ் வாழ்த்துக்கள் கடவுள் ஆசீர்வதிப்பாராக
ReplyDeleteநன்றி 🙏
DeleteIt's a big service Alex.... Keep rocking....God bless u..
ReplyDeleteநன்றி 🙏
DeleteAmen🙏
ReplyDeleteGod bless u